டோனி விட்டுக்கொடுத்துள்ளார் - விராத் கோஹ்லி

டோனி விட்டுக்கொடுத்துள்ளார் - விராத் கோஹ்லி

1 mins read

திருவனந்தபுரம்: இளம் வீரர் களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்க வேண்டும் எனும் நோக்கத்திலேயே அடுத்த இரு டி20 கிரிக்கெட் தொடர்களில் இருந்து முன்னாள் தலைவர் டோனி விலகியுள்ளார் என்று இப்போதைய இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி விளக்கம் அளித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் 2007ல் முதன்முறையாக நடந்த டி20 உலகக் கிண்ணப் போட்டிகளில் டோனி தலைமையிலான இந்திய அணி மகுடம் சூடியது. அதன்பின் 2011ல் சொந்த மண்ணில் நடந்த ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரிலும் இந்திய அணிக்கு அவர் கிண்ணம் வென்று தந்தார்.

2014ஆம் ஆண்டுடன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற போதும் ஒருநாள், டி20 போட்டி களில் அவர் தொடர்ந்து விளை யாடி வருகிறார். இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை தொடங்கவுள்ளது. அதன்பின் ஆஸ்திரேலிய அணி உடனும் மூன்று டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது. இவ்விரு தொடர்களுக்கான இந்திய அணியில் டோனி இடம் பெறாததால் அவரது எதிர்காலம் குறித்துக் கேள்விக்குறி எழுந்தது. இந்நிலையில், "டோனி இடம் பெறாதது குறித்து அணித் தேர் வுக்குழு ஏற்கெனவே தெளிவு படுத்திவிட்டது. இந்திய அணி யின் ஒருங்கிணைந்த அங்கம் அவர். டி20 போட்டிகளில் ரிஷப் போன்றோருக்கு அதிக வாய்ப்புகள் கிட்ட வேண்டும் என அவர் நினைக்கிறார். ஒருநாள் போட்டி களில் அவர் இன்னும் விளையாடி வருகிறார்.