சொந்த எட்டிஹாட் விளையாட்டரங்கில் நேற்று நடந்த லீக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் பதின்ம வயது ஸ்பெயின் ஆட்டக்காரர் பிராஹிம் டியாஸ் (இடது) 18வது, 65வது நிமிடங்களில் இரு கோல்களை அடிக்க, மான்செஸ்டர் சிட்டி குழு 2=0 என்ற கோல் கணக்கில் ஃபுல்ஹமை வென்றது. கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை டோட்டன்ஹம் குழுவை வீழ்த்திய ஆட்டத்தில் விளையாடிய அணியில் பத்து மாற்றங்களைச் செய்தார் சிட்டி நிர்வாகி கார்டியோலா. முழங்கால் காயத்தில் இருந்து மீண்டு களமிறங்கிய கெவின் டி பிராய்ன இம்முறை கணுக்காலில் காயமடைந்தது சிட்டிக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நாளை இரவு நடக்கவுள்ள இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் சிட்டி, சௌத்ஹேம்டனுடன் மோதவுள்ளது. படம்: ராய்ட்டர்ஸ்
இளம் வீரரின் இரட்டை கோல்களால் காலிறுதியில் மேன்சிட்டி
1 mins read
-

