சென்னை: ஐந்தாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) காற் பந்துத் தொடரின் 27வது லீக் ஆட்டத்தில் நடப்பு வெற்றி யாளரான சென்னையின் எப்.சி. அணி மீண்டும் தோல்வியைத் தழுவியது. சென்னை நேரு விளையாட்டரங் கில் நேற்று முன்தினம் இரவு நடந்த போட்டியில் சென்னையின் எப்.சி. அணி மும்பை சிட்டி எப்.சி.யை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத் தில் மும்பை அணி 20வது நிமிடத்தில் கோல் அடித்தது. அந்த அணி வீரர் மொடோவ் சோகோவ் கோலை நோக்கி அடித்த பந்தை சென்னை அணி யின் கோல் கீப்பர் கரண்ஜித் சிங் தடுத்தார். அவரது கையில் பட்டு திரும்பிய பந்தை மொடோவ் சோகோவ் மின்னல் வேகத்தில் அடித்து கோலுக்குள் திணித்தார். இந்தப் பருவத்தில் சென்னை அணி விட்டுக்கொடுத்த 11வது கோல் இதுவாகும்.
முதல் பாதியில் மும்பை அணி 1=0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. அதனைச் சமப்படுத்த சென்னை அணி மேற்கொண்ட முயற்சிகளுக்கு கடைசி வரை பலன் கிட்டவில்லை. முடிவில் மும்பை அணி 1=0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தியது. ஆறாவது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி சந்தித்த 5வது தோல்வி இதுவாகும். ஓர் ஆட் டத்தில் டிரா கண்டு இருந்தது. மும்பை அணி 6 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, ஒரு டிரா, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது.
புள்ளிகள் பட்டியலில் மும்பை 5வது இடத்திலும் இதுவரை ஒரு வெற்றியைக்கூட பதிவு செய்யாத சென்னை அணி கடைசி இடத் திலும் உள்ளன. நடப்பு வெற்றியாளர் என்ற கௌரவத்தைக் காப்பாற்ற அடுத்த போட்டியிலாவது வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி உள்ளது. தொடர் தோல்விகளால் அந்த அணியினர் சோர்வில் இருப்பதாக கூறப்படுகிறது.

