விடைகொடுத்த ரூனி

2 mins read
5e288fe1-bf43-4ebe-a1c8-e73ac5a1626d
-

லண்டன்: காற்பந்து நட்சத்திரம் வெயின் ரூனி, இறுதி முறையாக இங்கிலாந்தைப் பிரதிநிதித்து விளையாடிய ஆட்டத்தில் எந்த கோலையும் புகுத்தவில்லை. ஆனாலும் அமெரிக்காவை நட்பு முறை ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வென்ற அந்த நட்புமுறை ஆட்டத்தில் ரூனிக்கான கரவொ லியும் ஆரவாரமும் லண்டனின் வெம்பிளி விளையாட்டரங்கை அதிரவைத்தன.

இங்கிலாந்தின் தலைசிறந்த காற்பந்து வீரர்களில் ஒருவரான ரூனி, ஆட்டத்தின் 58ஆம் நிமிடத்தில் மாற்று ஆட்டக்காரராக களம் புகுந்தார். அப்போது கோல் கணக்கு 2-0 ஆக இருந்தது. முதற்பாதியில் ஜெஸ்ஸி லிங்கார் டும் ட்ரென்ட் அலெக்சாண்டர் ஆர்னல்டும் அந்த இரண்டு கோல்களை அடித்தனர். ஆட்டத்தைக் காண 68,155 பேர் அரங்கில் திரண்டிருந்தனர்.

அணிவகுத்து நிற்கும் இரு அணியினருக்கும் இடையே வெயின் ரூனி நடந்து சென்று அவர்களது மரியாதையை ஏற்றார். இந்த ஆட்டம் இவர் ஆடிய 120வது ஆட்டமாப் பதிவானது. இங்கிலாந்தைப் பிரிதிநிதிக்கும் கடமையிலிருந்து ரூனி, ஆகஸ்ட் 2017ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றபோதும் இந்த ஆட்டத்தை ரூனிக்கு நன்றி தெரிவிக்கும் ஆட்டமாக மாற்ற இங்கிலாந்து காற்பந்துச் சங்கம் முடிவு செய்தது. மான்செஸ்டர் யுனைட்டெட், எவர்ட்டன் ஆகிய அணிகளுக்கு இதற்குமுன் ஆடிய ரூனி , தற்போது அமெரிக்காவின் டி.சி யுனைட்டெட் காற்பந்துக் குழு வுக்காக விளையாடுகிறார்.

இந்த ஆட்டம் தனது அனைத் துலகக் காற்பந்துப் பயணத்தை சிறப்பான முறையில் நிறைவு செய்ததாக 33 வயது ரூனி கூறினார். இதற்கிடையே, ரஷ்யா வுக்கும் ஜெர்மனிக்கும் இடையி லான நட்புமுறை ஆட்டத்தில் ரஷ்யாவை ஜெர்மனி 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. ஆட்டத்தின் முதல் பாதியில் மான் செஸ்டர் சிட்டியைச் சேர்ந்த லெராய் சானேயும் பயர்ன் மூனிக் அணியைச் சேர்ந்த நிக்கலஸ் சுவெலேயும் ஆளுக்கு ஒரு கோலைப் புகுத்தினர். மூன்றாவது கோலை செர்கே நாப்ரி போட்டார். மற்றோர் ஆட்டத்தில், குரோ‌ஷியா, ஸ்பெயினை 3-=2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. நான்கு ஆட்டங் களிலிருந்து ஆறு புள்ளிகளைப் பெற்றுள்ள ஸ்பெயின், 'யுயே ஃபா நேஷன்ஸ் லீக்' பட்டியலின் நான்காவது பிரிவில் முதலாம் நிலையில் உள்ளது. ஆனால், ஸ்பெயினுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே அடுத்து வரும் ஆட்டத்தில் ஏதேனும் ஓர் அணி சமநிலை இன்றி வெற்றி பெற்றால் அந்த அணி ஸ்பெயினை வீழ்த்தி லீக்கின் இறுதிச் சுற்றுக்குச் செல்லும்.