கோஹ்லியை மிஞ்சிய மிதாலி ராஜ்

கோஹ்லியை மிஞ்சிய மிதாலி ராஜ்

1 mins read

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீராங்கனை மிதாலி ராஜ், டி20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் பாகிஸ் தான், அயர்லாந்துக்கு எதிராக அரைசதம் விளாசி அசத்தினார். அனைத்துலக டி20 போட்டியில் அவர் இதுவரை 80 இன்னிங்சில் பந்தடித்து 17 அரை சதங்களுடன் 2,283 ஓட்டங்கள் குவித்து இருக்கிறார். ஆண்களைக் காட்டிலும் அவர் அதிக ஓட்டங்கள் சேர்த்து வியப் பில் ஆழ்த்தினார். டி20 கிரிக்கெட் போட்டி களில் வீரர்களில் அதிகபட்சமாக நியூசி லாந்தின் மார்ட்டின் கப்தில் 2,271 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

இந்திய வீரர்கள் ரோகித் சர்மா 2,207 ஓட்டங்களும் விராத் கோஹ்லி 2,102 ஓட்டங்களும் எடுத்துள்ளனர். இவர்களை மிதாலிராஜ் தற் போது மிஞ்சினாலும், வீராங்கனை களின் பட்டியலில் அவர் 4வது இடம் வகிக்கிறார். நியூசிலாந்து வீராங்கனை சுசி பேட்ஸ் 2,996 ஓட்டங்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

35 வயது மிதாலிராஜ் கூறுகையில், "கடந்த உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு அணி நிறைய முன்னேற்றம் கண்டு இருக்கிறது. அணிக்கு வருகை தந்துள்ள இளம் வீராங்கனைகள் டி20 போட்டிக்கான அணுகுமுறையை மாற்ற விரும்பு கிறார்கள். "அவர்களுக்காக இந்த உலகக் கிண்ணத்தை நிச்சயம் வெல்ல விரும்புகிறேன். "களக்காப்புக் கட்டுப்பாடுள்ள 'பவர்=பிளே'க்குள் அதிகமான பவுண்டரிகள் அடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறேன். "இந்திய அணிக்காக தொடர்ந்து ஓட்டங்கள் குவிப்பேன் என்று நம்புகிறேன்," என்றார்.