ஆம்ஸ்டர்டாம்: சிங்கப்பூர் நேரப்படி நேற்று அதிகாலை நேஷன்ஸ் லீக் காற்பந்துப் போட்டி ஒன்றில் நெதர்லாந்தும் பிரான்சும் மோதின. இதில் பிரெஞ்சு அணி 0-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் மண்ணைக் கவ்வியது. இதன்மூலம், கடந்த 15 ஆட்டங்களில் தோல்வியைச் சந்திக் காத பிரான்ஸ் தலைகுப்புற சாய்ந் தது. நேற்றைய ஆட்டத்தின் 44வது நிமிடத்தில் நெதர்லாந்தின் ரயன் பேபல் அடித்த பந்தை பிரான்ஸ் கோல்காப்பாளர் ஹுயூகோ லாரிஸ் தடுத்தார். அதில் பந்து தற்பொழுது லிவர்பூல் அணிக்காக விளை யாடும் வைன்ஹால்டம் என்பவரிடம் சென்றது.
அவரும் நன்றி சொல்லாத குறை யாகப் பந்தை வலைக்குள் தட்டி விட்டு நெதர்லாந்துக்கு முன்னணி பெற்றுத் தந்தார். அதைத் தொடர்ந்து ஆட்டத்தில் பிரான்சின் கோல்காப்பாளர் ஹுயூ கோ லாரிஸ் நெதர்லாந்தின் பல கோல் புகும் வாய்ப்புகளைத் தடுத்து தமது அணியைக் காப்பாற்றினார். ஆனால், இவற்றைச் சரிவர பயன்படுத்திக்கொண்டு பதிலுக்கு ஒரு கோல் போட முடியாமல் பிரான்ஸ் திணறியது. இது ஒருபுறமிருக்க, ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் நெதர்லாந்து அணியின் மெம்ஃபிஸ் டிபாய் கிடைத்த பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி தமது அணியின் இரண்டாவது கோலைப் போட்டு பிரான்சை மீளாத் துயரில் ஆழ்த்தினார்.

