இத்தாலியின் ஆட்டம் மெருகேறி வருவதாக நிர்வாகி பெருமிதம்

2 mins read
3658045e-dae1-4872-aef4-1af708664c95
-

மிலான்: நேஷன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் போர்ச்சுகலுக்கு எதி ராக கோல் எதுவும் போடவில்லை என்றாலும் இத்தாலியின் ஆட்டம் மெருகேறி வருவதாகக் கூறி உள் ளார் அதன் நிர்வாகி ரொபோர்ட்டோ மன்சினி. குழு நிலை ஆட்டம் ஒன்றில் இத்தாலியை அதன் சொந்த மண்ணில் கோல் எதுவும் இல் லாமல் சமநிலை கண்டது போர்ச் சுகல். நேற்று முன் தினம் நடந்த இந்த ஆட்டத்தின் முதல் பாதி நேரத்தில் போர்ச்சுகலுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது இத்தாலி யின் தற்காப்பு ஆட்டம். உலகக் கிண்ணப் போட்டி களுக்குப் பிறகு அனைத்துலகப் போட்டிகளில் இன்னும் களமிறங் காத ரொனால்டோ இல்லாத போர்ச்சுகலைத் திணறச் செய்தார் இத்தாலிக்காக 100வது ஆட்டத் தில் விளையாடிய தற்காப்பு ஆட் டக்காரர் கியோர்கியோ சிலினி. பெர்னார்டோ சில்வா, ரூபென் நிவேஸ், ஆன்டிரே சில்வா போன்ற அபார ஆட்டக்காரர்கள் இருந்தும் போர்ச்சுகல் குழுவால் இத்தாலியை ஒன்றும் செய்ய முடியவில்லை.

தட்டுத் தடுமாறிய போர்ச்சுகல் பிற்பாதி ஆட்டத்தில் போட முயன்ற கோலையும் எதிரணியின் கோல் காப்பாளர் அபாரமாக தடுத் தாடினார். தற்காப்பு ஆட்டத்தில் மிரட்டினா லும் கோல் போடும் சில முயற்சி கள் பலனளிக்காமல் போனது இத்தாலிக்கு போதாது காலம்தான். அதில், காயம் பட்டதற்கான கூடுதல் நேரத்தின்போது இத்தாலி யின் லோரென்சோ பெலிகிரினி உதைத்தப் பந்தை போர்ச்சுகல் கோல் காப்பாளர் பேட்ரிகோ கோலாகாமல் தடுத்ததும் அடங்கும்.

இதனால் 7 புள்ளிகளுடன் ஏ3 பிரிவில் முதல் இடத்தைப் பிடித்த போர்ச்சுகல் அரையிறுதிக்கு முன் னேறியது. அரையிறுதி வாய்ப்பைக் தவற விட்டாலும் தன் குழுவின் ஆட்டம் மெருகேறி வருவதாக பெருமிதம் தெரிவித்துள்ளார் இத்தாலி நிர் வாகி ரொபோர்ட்டோ மன்சினி. "போலாந்துக்கு எதிரான ஆட் டத்தோடு ஒப்பிடுகையில் இந்த ஆட்டத்தில் முன்னேற்றம் கண்டு உள்ளோம். "அதாவது ஐரோப்பிய சாம்பிய னான போர்ச்சுகலுக்கு எதிரான இந்த ஆட்டத்தை நாங்கள் கட்டுக் குள் வைத்திருந்தது மிகச்சிறந்த ஒன்று," என்றார்.