பல்லேகலே: பதினேழு ஆண்டுகள் கழித்து இலங்கை மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை வென்று சாதித்துள்ளது இங்கி லாந்து அணி. இலங்கைக்குச் சுற்றுப் பயணம் சென்றுள்ள இங்கிலாந்து அணி, கடந்த 14ஆம் தேதி 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி யது. பல்லேகலேயில் நடைபெற்ற இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 290 ஓட்டங்கள் எடுத்தது. இலங்கை முதல் இன்னிங்சில் 336 ஓட்டங்கள் குவித்தது. 46 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை இங்கிலாந்து ஆடியது. அந்த அணி 80.4 ஓவர்களில் 346 ஓட் டங்களுக்கு அனைத்து விக்கெட்டு களையும் இழந்தது. இதனால் இலங்கையின் வெற்றிக்கு 301 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயிக்கப் பட்டது. இலங்கை அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் அகிலா தனஞ்செயா 6 விக்கெட்டுகளையும் தில்ருவான் பெரேரா 3 விக்கெட்டுக ளையும் சாய்த்தனர்.
நேற்று முன்தினம் 4வது நாள் ஆட்டத்தில் இலங்கை 2வது இன்னிங்சை விளையாடியது. இதில் குஷால் சில்வா, தனஞ் செயா டி சில்வா, குசல் மென்டிஸ் ஆகிய மூவரும் சொற்ப ஓட்டங் களுக்கு அடுத்தடுத்து சுழற்பந்து வீச்சாளர் ஜேக் லீச் பந்துவீச்சில் ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித் தனர். கருணரத்னே கைகொடுக்க, இலங்கை அணி 65.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 226 ஓட் டங்கள் எடுத்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் அன்றைய ஆட் டம் கைவிடப்பட்டது.
மூன்று விக்கெட்டுகள் கை வசம் இருக்க, வெற்றிக்கு 75 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் இலங்கை நேற்று கடைசி நாள் ஆட்டத்தை விளையாடியது. ஆனால், 17 ஓட்டங்கள் எடுப் பதற்குள் எஞ்சிய 3 விக்கெட்டுக ளையும் இலங்கை அணி எளிதில் இழந்தது. இதனால் இங்கிலாந்து 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை அணியில் மேத்யூஸ் அதிகபட்சமாக 88 ஓட்டங்கள் எடுத்தார். ஜேக் லீச் 5 விக்கெட்டு களையும் மொயீன் அலி 4 விக் கெட்டுகளையும் கைப்பற்றினர்.
2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணித் தலைவர் சுரங்க லக்மால் விக்கெட்டை கைப்பற்றிய மகிழ்ச்சியைக் சக வீரரும் இங்கிலாந்தின் விக்கெட் காப்பாளருமான பென் ஃபோக்சுடன் கொண்டாடும் இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட். படம்: ஏஎஃப்பி

