போதைப்பொருளைத் தவறான முறையில் பயன்படுத்துவது தொடர்பான சட்டத்தின்கீழ் மாற் றங்கள் கொண்டு வர பரிந்து ரைகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி போதைப்பொருள் உட்கொள்ள இளையர்களை அனு மதிப்பது குற்றமாகும். பரிந் துரையின்படி இத்தகைய குற்றங் களுக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்படும். முன்வைக்கப்பட்டுள்ள பரிந் துரைகளின்படி பெரியவர்கள் தங்களிடம் இருக்கும் போதைப் பொருளை இளையர்கள் உட்கொள்ளாதபடி பார்த்துக் கொள்ளாவிட்டால் அது குற்ற மாகக் கருதப்படும் என்று உள்துறை அமைச்சு நேற்று கூறியது.
இந்தக் குற்றத்துக்கு அதிக பட்சமாகப் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் படலாம். போதைப்பொருள் கடத்து பவரை மற்றவரிடம் அறிமுகம் செய்து வைத்தல், போதைப் பொருளை உற்பத்தி செய்ய ஒருவருக்குக் கற்றுக்கொடுப்பது, போதைப்பொருளை உட்கொள்வது அல்லது இறக்குமதி செய்வது போன்ற குற்றங்களைப் புரிபவர் களுக்குக் கடுமையான தண் டனை விதிக்கப்படும். இத்தகைய குற்றங்களை முதல்முறையாகப் புரிபவர்களுக்கு பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
கடந்த ஆகஸ்ட் மாதம் மத்தியப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள், பணம். படம்: மத்தியப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு

