பெல்ஜியத்தை புரட்டி எடுத்த சுவிஸ் அணி

1 mins read
72263bd5-4067-4217-b9ff-cb8fdbd86ff0
-

பாரிஸ்: ஐரோப்பிய காற்பந்துச் சங்கத்தின் நேஷனல் லீக் காற்பந்து போட்டியில் சுவிட்ஸ ர்லாந்து அணி, பெல்ஜிய அணியை 5-=2 என்ற கோல் கணக்கில் வென்றது. ஆட்டத்தின் முதற் பகுதியில் பெல்ஜிய அணி வீரர் தோர்கன் ஹசார்ட் இரண்டு கோலைப் புகுத்தினார். ஆயினும், சுவிட்சர்லாந்து அணி வெகு விரைவிலேயே முந்திக்கொண்டது. ஆட்டத்தின் முதற்பாதிக்குள் சுவிட்சர்லாந்து அணி மூன்று கோல்களைப் புகுத்தியது. ஹரிஸ் செஃபெ ரொவிக்கின் முதல் இரண்டு கோல்களையும் பெனால் டியில் ரிக்கார்டோ ரொட்ரீக்ஸ் மூன்றா வது கோலையும் புகுத்தினர்.

ஆட்டத்தின் 62 ஆம் நிமிடத் தில் ஸெர்டன் ஷகிரி அனுப்பிய பந்தை நிக்கோ எல்வெடி கோல் வளைக்குள் அடித்து மற்றொரு புள்ளியைப் பெற்றார். பின்னர் செஃபெரொவிக் மூன்று கோல் களை அடித்து தமது அணியின் வெற்றியை உறுதிசெய்தார். "ஒவ்வொரு விளையாட்டாள ருக்கும் நான் வாழ்த்துத் தெரி விக்க விரும்புகிறேன். அனைவரும் மன உறுதியுடனும் மதிநுட்பத்து டனும் விளையாடினர்," என்று சுவிஸ் பயிற்றுவிப்பாளர் பெட் கொவிச் தெரிவித்தார். விறுவிறுப்பான இந்த ஆட்டத் திற்குப் பிறகு சுவிட்சர்லாந்து அடுத்தாண்டு ஜூன் மாதம் அரையிறுதி ஆட்டத்தில் போர்ச் சுகல் மற்றும் இங்கி லாந்துடன் இணைந்து விளையாடும்.

சுவிட்சர்லாந்தின் ஹரிஸ் செஃபெரொவிக் (வலது) உதைத்த பந்து பெல்ஜியம் கோல் காப்பாளர் திபவுத் கொர்டொய்யைத் தாண்டி கோல் வலைக்குள் புகுந்தது. படம்: ஏஎஃபி