பிரிஸ்பன்: கிரிக்கெட் போட்டிகளின் வெளிநாட்டுத் தொடர் களில் இந்தியா மட்டுமின்றி பெரும்பாலான அணிகளும் அவ்வளவு சிறப்பாக செய்ய வில்லை என்று இந்திய அணி யின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி செய்தியாளர் களிடம் தெரிவித்தார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் மோதும் இந்திய அணிக்கு டெஸ்ட் தொடரை வெல்வது இந்தியாவுக்கு எந்த அளவு முக்கியம் என்று பிரிஸ்பேன் நகரில் செய்தி யாளர்கள் ரவி சாஸ்திரியிடம் கேட்டதற்கு அவர் இவ்வாறு பதி லளித்தார். "வெளிநாட்டுத் தொடர்களில் இந்தியா மட்டுமே தோல்வி அடைவது போல் கேள்வி கேட்கிறீர்கள்.
"அண்மைய வெளிநாட்டுத் தொடர்களை நன்கு கவனித்தால், பெரும்பாலான அணிகள் அவ்வளவு சிறப்பாக செய்ய வில்லை என்பது தெரியும். கடந்த ஐந்தாறு ஆண்டுகளில் எந்த அணியும் வெளிநாட்டில் சாதிக்காதபோது இந்தியாவை மட்டுமே ஏன் குறிவைத்துக் கேட்கிறீர்கள்?" என்று காட்டத் துடன் பதிலளித்தார். "இந்தியா பலவீனமான அணி என யாரும் கூறியதில்லை. எனவே எனக்குக் கவலை இல்லை," என்றும் ரவி சாஸ்திரி சொன்னார்.

