குரோ‌ஷியாவை 2-1 வீழ்த்திய இங்கிலாந்து

குரோ‌ஷியாவை 2-1 வீழ்த்திய இங்கிலாந்து

1 mins read

லண்டன்: ஐரோப்பிய காற்பந்துச் சங்கத்தின் நேஷனல் லீக் காற்பந்து போட்டியில் இறுதி ஆட்டத்திற்குச் செல்லவேண்டும் என்ற வைராக்கியத்தில் இங்கி லாந்து குரோ‌ஷி யாவை 2-=1 கோல் கணக்கில் வென்றது. லண்டனின் வெம்பர்லி அரங் கில் நடைபெற்ற ஆட்டத்தின் முதற்பாதியில் எந்த அணியின ரும் கோல் புகுத்தாத நிலையில் இழுபறியாக இருந்தது. 57ஆம் நிமிடத்தில் குரோ‌ஷியா அணியைச் சேர்ந்த அண்ட்ரெஜ் க்ரமரிக் கோல் ஒன்றைப் புகுத்தினார்.

ஆனால் ஆட்டத் தின் 77 நிமிடத்தில் லிங்கர்ட் அடித்த ஒரு கோலும் 85 நிமிடத்தில் கேன் புகுத்திய மற்றொரு கோலும் இங்கிலாந் திற்கு வெற்றியைத் தந்தன. அடுத்தாண்டு ஜூனில் போர்ச்சுகளுடன் இங்கிலாந்து அணி இறுதி ஆட்டத்தில் மோதவுள்ளது. லீக் பட்டியலில் தற்போது ஏழு புள்ளிகளைப் பெற்ற இங்கிலாந்து, ஸ்பெயி னைவிட ஒரு புள்ளி அதிக மாகவும் குரோ‌ஷியாவைவிட மூன்று புள்ளிகள் அதிகமாகவும் பெற்றுள்ளது.

1966க்குப் பிறகு இறுதிச் சுற்றுக்குச் செல்லும் மற்றொரு வாய்ப்பை இந்த வெற்றி இங்கிலாந்திற்குத் தந்துள்ளது. கடந்த மாதம் ஸ்பெயினை இங்கிலாந்து 3-2 என்ற கோல் கணக்கில் வென்றதைத் தொடர்ந்து அடுத்த வருட ஆட்டங்கள் சிறப்பாக இருக்கும் என்று இங்கிலாந்து அணியின் நிர்வாகி ஜெரத் சவுத்கேட் தெரிவித்தார். தமது அணி மெல்ல வலுப்பெற்று சிறந்த அணிகளை வென்று வருவதாக சவுத்கேட் தெரிவித்தார்.