காயமுற்று வெளியேறிய எம்பாப்பே, நெய்மார்

காயமுற்று வெளியேறிய எம்பாப்பே, நெய்மார்

1 mins read
9c9ae89b-c3c3-480c-8d99-e695e02ea0e8
-

பாரிஸ்: நேற்று முன்தினம் நடைபெற்ற வெவ்வேறு நட்புமுறை காற்பந்து ஆட்டங்களில் பிரான்சும் பிரேசிலும் வெற்றி பெற்றன. ஆனால் இரு குழுக்களும் பின்னடைவைச் சந்தித்தன. பிரான்சின் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பேயும் பிரேசிலின் நெய்மாரும் காயமுற்றனர். இதன் விளைவாக அவர்கள் இருவரும் ஆட்டத்திலிருந்து வெளியேறினர். பாரிசில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு உலகக் கிண்ண வெற்றியாளர் பிரான்ஸ், உருகுவேயுடன் மோதியது. இந்த ஆட்டத்தை 1-=0 எனும் கோல் கணக்கில் பிரான்ஸ் கைப்பற்றியது. ஆட்டத்தின் 52வது நிமிடத்தில் பிரான்சுக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக்கினார் ஒலிவியே ஜிரூ. முதல் பாதி ஆட்டத்தில் எம்பாப்பே கீழே விழுந்ததில் அவருக்குக் காயம் ஏற்பட்டது.

உருகுவே ஆட்டக்காரர் கம்பானாவுடன் பந்துக்காகப் போட்டிபோட்டுக்கொண்டு முண்டி யடித்துச் சென்றபோது எம்பாப்பே கீழே விழுந்தார். கீழே விழுந்ததில் அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. காயமடைந்தபோதிலும் வலியைத் தாங்கிக்கொண்டு தொடர்ந்து விளையாட முயன்றார் எம்பாப்பே. ஆனால் அவரால் வலி தாங்க முடியாமல் போக, அவருக்குப் பதிலாக மாற்று ஆட்டக்காரர் களமிறக்கப்பட்டார். மற்றொரு நட்புமுறை ஆட்டத் தில் பிரேசிலும் கெமரூனும் மோதின.

ஆட்டத்தின்போது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக பிரான்சின் இளம் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பேவினால் ஆட்டத்தைத் தொடர முடியாமல் போனது. தோள்பட்டையைப் பிடித்துக் கொண்டு அவர் திடலைவிட்டு வெளியேறுவதைப் பார்த்து பிரெஞ்சு ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். படம்: இபிஏ