4 ஓட்டங்களில் தோல்வியைத் தழுவிய இந்திய அணி

4 ஓட்டங்களில் தோல்வியைத் தழுவிய இந்திய அணி

1 mins read

பிரிஸ்பன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா நான்கு ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளது. ஆஸ்திரேலியா 16.1 ஓவர் களில் 153 ஓட்டங்கள் எடுத் திருந்தபோது மழை பெய்தது. இதனால் ஆட்டம் நீண்ட நேரம் தடைபட்டது. பின்னர் மழை விட்டதும் ஆட்டம் தொடர்ந்தது. போட்டி 17 ஓவர்களாக குறைக் கப்பட்டது.

ஆஸ்திரேலியா 17 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ஓட்டங்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா 158 ஓட்டங்கள் எடுத்தபோதிலும் டக்வொர்த் லுவிஸ் விதிப்படி இந்தியாவின் வெற்றிக்கு 17 ஓவர்களில் 174 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. கடைசி மூன்று பந்துகளில் 11 ஓட்டங்கள் தேவைப்பட்டன. நான்காவது பந்தில் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்தார். இதனால் இந்தியாவின் தோல்வி உறுதியானது. கடைசி பந்தில் குல்தீப் யாதவ் பவுண்டரி அடிக்க இந்தியா 17 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ஓட்டங்கள் எடுத்தது.