தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆக அதிகப் பதக்கங்கள்: சாதனை படைத்த மேரி கோம்

2 mins read
8c1662d5-3cdf-4715-a1b8-bf51b03d1f79
-

புதுடெல்லி: மகளிருக்கான உலகக் குத்துச்சண்டைப் போட்டி யின் அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மேரி கோம் தகுதி பெற்றுள்ளார். இந்தப் போட்டி இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்று வருகிறது. அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றதன் மூலம் ஏழாவது குத்துச்சண்டை பதக்கத்தை மேரி கோம் உறுதி செய்துள்ளார். ஆக அதிகப் பதக்கங்கள் வென்றுள்ள குத்துச்சண்டை வீராங்கனை எனும் சாதனையை மேரி கோம் படைத்துள்ளார். 48 கிலோ எடைப் பிரிவின் காலிறுதிச் சுற்றில் சீனாவின் வூ இயூவை 35 வயது மேரி கோம் சந்தித்தார். மேரி கோமின் குத்துகள் இடி மாதிரி விழ, சீன வீராங்கனை திக்குமுக்காடினார்.

இறுதியில் 5=0 எனும் புள்ளிக் கணக்கில் மேரி கோம் அபார வெற்றி பெற்றார். இதற்கு முன்பு ஆறு பதக்கங்கள் வென்றிருந்த அயர் லாந்து வீராங்கனை கேட்டி டெய் லருடன் மேரி கோம் சமநிலையில் இருந்தார். கேட்டி டெய்லர் ஐந்து தங்கங்கள் ஒரு வெள்ளி வென்றவர்.

"ஆட்டம் மிகவும் சவால் மிக்கதாக இருந்தது. வூ இயூவின் அணுகுமுறையை நன்கு ஆராய்ந் தேன். அதன்படி திட்டமிட்டேன். அவரை முறியடிக்க தகுந்த உத்தியைக் கையாண்டேன். ஒவ்வொரு போட்டிக்கும் சீனா வெவ்வேறு குத்துச்சண்டை வீராங் கனைகளை அனுப்பி வைக்கிறது. சீனாவில் நிறைய வலிமைமிக்க குத்துச்சண்டை வீராங்கனைகள் இருக்கிறார்கள்," என்று செய்தி யாளர்களிடம் மேரி கோம் தெரி வித்தார்.

சீனாவின் குத்துச்சண்டை வீராங்கனை வூ இயூவை வீழ்த்திக் கொண்டாடும் இந்தியாவின் மேரி கோம் (வலது). படம்: ஏஎஃப்பி