ஒரே சமயத்தில் அண்ணன் சூர்யா, தம்பி கார்த்தி ஆகிய இருவருடனும் வெவ்வேறு படங்களுக்காக ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார் ரகுல் பிரீத்சிங். 'தேவ்' படத்தில் கார்த்திக்கும், 'என்ஜிகே'வில் சூர்யாவுக்கும் இவர்தான் ஜோடி. இரு படங்களின் படப்பிடிப்பும் மிக விரைவில் முடிவுக்கு வர உள்ளன. "இயக்குநர் செல்வராகவ னுடனும் சூர்யாவுடனும் இணைந்து பணியாற் றியதை மறக்கவே இய லாது. கடந்து சென்ற அந்த நாட்கள் அற்புத மானவை. இருவரிடம் இருந்தும் கற்றுக் கொள்வதற்கு ஏராள மான விஷயங்கள் உள் ளன," என்கிறார் ரகுல் பிரீத்சிங்.
'என்ஜிகே' அரசி யல் சார்ந்த படமாக உருவாகி வருவ தாகக் குறிப்பிடுபவர், படம் குறித்து மேற் கொண்டு ஏதும் தெரிவிக்க இயலாது என்கிறார். 'தேவ்' படத் தில் சுயமாக உழைத்து முன்னேறும் தொழில் அதிபராக நடித்துள்ளா ராம். "கதைப்படி அக்கதா நாயகி தன் தொழிலை மட்டுமே தீவிரமாகக் கவனிக்கிறார். மிகவும் கீ ழ் நி லை யி லி ரு ந் து உயரங்களைத் தொட்ட தால் வேறு எதிலும் அவரது கவனம் இருக் காது. "இந்நிலையில் ஏதா வது சாகசம் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று குறு குறுவென சுற்றித் திரியும் நாயகன் கார்த்தியின் அறிமுகம் கிடைக்கிறது.
"அதன் பிறகென்ன? நாயகியின் மனதில் பட்டாம்பூச்சிகள் பறக்கும். அவனுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியையும் ரசித்து அனுபவிப்பாள். இந்தக் கதாபாத்திரத்தில் எனது இயல்பான குணாதிசயங்களை வெளிப்படுத்த முடிந்தது. அதனால் படப்பிடிப்பின் போது ஜாலியாக இருந்தேன். இவ்விரு படங்களும் உடனுக்குடன் வெளிவந்தால் நன்றாக இருக்கும்.

