டிரோக்பா ஓய்வு

1 mins read
53a23544-461a-47ec-ac7c-9ee42d22f016
-

லண்டன்: செல்சி காற்பந்துக் குழுவின் முன்னாள் ஆட்டக் காரரான டிடியே டிரோக்பா, 40 (படம்), தமது 20 ஆண்டுகால காற்பந்து வாழ்க்கை முடிவுக்கு வருவதாக அறிவித்துள்ளார். 2004=2012 வரையிலும் பின் 2014=15 பருவத்திலும் செல்சிக்காக விளையாடிய ஐவரி கோஸ்ட் நாட்டின் டிரோக்பா, அக்குழு சார்பில் 164 கோல்களையும் அடித்து உள்ளார்.

அவரது காலத்தில் செல்சி குழு நான்கு முறை இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டத்தை வென்றது. 2011-12 சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை அக்குழு வெல்ல முக்கியக் காரணம் டிரோக்பாதான். மார்சே, ஷங்ஹாய் ஷென்ஹுவா, கலட்டாசரே போன்ற குழுக்களுக்காகவும் விளையாடி இருக்கும் இவர், அமெரிக்காவின் ஃபீனிக்ஸ் ரைசிங் குழுவிற்காகக் கடந்த பருவத்தில் விளையாடினார்.

தாய்நாட்டிற்காக 104 ஆட்டங்களில் களமிறங்கு 65 கோல்களையும் அடித்திருக்கும் இவர், ஆப்பிரிக்காவின் சிறந்த காற்பந்து வீரர் விருதை இருமுறை தட்டிச் சென்ற பெருமைக்குரியவர்.