மெல்பர்ன்: தொடர்ந்து எட்டாவது டி20 தொடரைக் கைப்பற்றும் முனைப்புடன் ஆஸ்திரேலியா சென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு முதல் ஆட்டத்தில் நான்கே ஓட்டங்களில் வெற்றியைப் பறிகொடுத்தது சற்று ஏமாற்றம் அளிப்பதாக அமைந்தது. இருந்தாலும் இன்னும் இரு ஆட்டங்கள் எஞ்சியுள்ளதால் இந்த முறையும் நிச்சயம் தொடரை வெல்ல முடியும் என்ற நம்பிக் கையை விராத் கோஹ்லி தலைமை யிலான இந்திய அணி இழக்க வில்லை. இன்று நடக்கவுள்ள 2வது ஆட்டத்தில் வெற்றி கைகூட, ஒரு சில மாற்றங்களுடன் களமிறங் குவது பற்றி யோசித்து வரு வதாகச் சொல்லப்படுகிறது. மூன்றாவது வீரராகக் களம் இறங்கும் லோகேஷ் ராகுல் கடை சியாக ஆடிய ஆறு போட்டிகளில் ஒருமுறைகூட 30 ஓட்டங்களைத் தாண்டவில்லை.
அதனால், அவ ருக்குப் பதிலாக மணீஷ் பாண்டே விற்கு வாய்ப்புத் தரப்படலாம். அதேபோல, பந்துவீச்சிலும் மாற்றம் இருக்கலாம். முதல் போட் டியில் நான்கு ஓவர்களை வீசி விக்கெட் எதுவும் வீழ்த்தாமல் 55 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார் குருணால் பாண்டியா. அவரது இடத்தில் யுஸ்வேந்திர சகலைக் களமிறங்குவது பற்றி அணி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. அதே நேரத்தில், பாண்டியா 'ஆல் ரவுண்டர்' என்பதும் கவனத்தில் கொள்ளப்படும். வாரப் பிற்பகுதியில் மெல்பர்ன் நகரில் மழை பெய்யக்கூடும் என மு ன் னு ரை க் க ப் ப ட் டு ள் ள தா ல் நேற்று முன்தினம் நடந்த முதல் ஆட்டத்தைப் போலவே இன்றைய ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

