சுசுகி கிண்ணக் காற்பந்து: அதிர்ச்சி தர முயற்சி

சுசுகி கிண்ணக் காற்பந்து: அதிர்ச்சி தர முயற்சி

2 mins read

சுசுகி கிண்ணக் காற்பந்துத் தொடரின் அரையிறுதிக்குத் தங்க ளால் முன்னேற முடியும் என சிங்கப்பூர்க் குழுவின் பயிற்றுவிப் பாளர் ஃபாண்டி அகமது உறுதி: யாக நம்புகிறார். மொத்தம் பத்துக் குழுக்கள் களமிறங்கியுள்ள இந்தத் தொடரில் தாய்லாந்து, பிலிப்பீன்ஸ், இந்தோனீசியா, திமோர் லெஸ்டே ஆகிய குழுக்களுடன் சிங்கப்பூர் 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ளது. முதல் ஆட்டத்தில் இந்தோனீசி யாவை 1-0 என்ற கோல் கணக் கில் தோற்கடித்த சிங்கப்பூர்க் குழு, அடுத்த ஆட்டத்தில் அதே கோல் வித்தியாசத்தில் பிலிப்பீன் சிடம் வீழ்ந்தது. இந்த நிலையில், தேசிய விளை யாட்டரங்கில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் சஃபுவான் பஹாருதின் மூன்று கோல்களை யும் இக்சான் ஃபாண்டி இரு கோல்களையும் ஃபாரிஸ் ரம்லி ஒரு கோலையும் அடிக்க, சிங்கப் பூர் 6=1 என வெற்றி பெற்றது. 2007 ஜனவரியில் லாவோசை 11-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பிறகு, சுசுகி கிண்ணப் போட்டிகளில் சிங்கப்பூரின் ஆகப் பெரிய வெற்றி இதுதான்.

அத்துடன், இக்சான் ஃபாண்டி அடித்த இரண்டாவது கோல் சுசுகி கிண்ணப் போட்டிகளில் சிங்கப் பூரின் 100வது கோலாக அமைந் தது ஆட்டத்தின் சிறப்பம்சம். இது குறித்து மகிழ்ச்சி தெரி வித்த ஃபாண்டி அகமது, "சுசுகி கிண்ணப் போட்டிகளில் நூறு கோல்களை அடித்திருப்பது அற்புத மானது. முதல் இரு ஆட்டங்களில் தடுமாறிய இக்சான் கோல் வேட்டைக்குத் திரும்பியிருப்பது நல்ல விஷயம். அடுத்து வரும் ஆட்டங்களிலும் அவர் இதைத் தொடரவேண்டும்," என்றார்.

நாளை மறுநாள் பேங்காக்கின் ராஜமங்கள விளையாட்டரங்கில் நடக்கவுள்ள ஆட்டத்தில் நடப்பு வெற்றியாளரான தாய்லாந்துடன் சிங்கப்பூர்க் குழு பொருதுகிறது. இந்த ஆட்டத்தில் வெல்லும் பட்சத்தில் சிங்கப்பூர்க் குழு அரையிறுதிக்கு முன்னேறிவிடும். அவ்வாறு இல்லாமல், இந்த ஆட்டம் சமநிலையில் முடிந்து, இன்னோர் ஆட்டத்தில் பிலிப் பீன்சை இந்தோனீசியா வீழ்த்தி னாலும் சிங்கப்பூரின் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகிவிடும். "அணி மீது நம்பிக்கையுள்ளது. அரையிறுதிக்கு முன்னேற முடியும் என நான் நினைக்கிறேன். சொந்த மண்ணில் வைத்தே தாய்லாந்துக்கு அதிர்ச்சி கொடுக்க முயல்வோம்," என்றார் ஃபாண்டி.