பிரிஸ்பேன்: இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராத் கோஹ்லி டி20 போட்டியில் செய்த உலக சாதனையை ஷிகர் தவான் முறியடித்துள்ளார். ஆஸ்திரேலியா பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20, டெஸ்ட், ஒருநாள் ஆகிய தொடர்களில் விளையாட உள் ளது. பிரிஸ்பேன் நகரில் நடை பெற்ற முதலாவது டி20 போட்டி யில் ஆஸ்திரேலிய அணி 4 ஓட் டங்களில் வெற்றி பெற்றது. டி20 போட்டிகளில் ஷிகர் தவான், ரோஹித் சர்மா, விராத் கோஹ்லி ஆகிய மூவரும் இந்த ஆண்டில் சூப்பர் பேட்டிங் ஃபார் மில் இருந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஷிகர் தவான் இந்த ஆண்டில் டி20 போட்டிகளில் 15 ஆட்டங்களில் விளையாடி 572 ஓட்டங்களைச் சேர்த்து அதிகமாக ஓட்டம் குவித்தவர்கள் பட்டியலில் முதலி டத்தில் உள்ளார்.
ஆனால், டி20 போட்டியில் ஓர் ஆண்டில் அதிகபட்சமாக ஓட் டங்கள் சேர்த்ததில் அணித் தலைவர் விராத் கோஹ்லியின் சாதனையை எந்த வீரரும் முறி யடிக்கவில்லை. கடந்த 2016ஆம் ஆண்டு கோஹ்லி 641 ஓட்டங்கள் சேர்த் ததே அதிகபட்சமாக இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது ஷிகர் தவான் இந்த ஆண்டில் 572 ஓட்டங்கள் சேர்த்து விராத் கோஹ்லியின் சாதனையை நெருங்கியிருந்தார்.