ஆன்டிகுவா: மகளிர் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத் தில் தோற்கடித்தது இங்கிலாந்து அணி. ஆறாவது மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. அரை இறுதிப் போட் டிக்கு நடப்பு வெற்றியாளர் வெஸ்ட் இண்டீஸ், இந்தியா, ஆஸ்திரே லியா, இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்றன. இதில் முதல் அரையிறுதிப் பேட்டியில் 71 ஓட்டங்கள் வித்தியா சத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி இறுதிப்போட் டிக்குத் தகுதிபெற்றது ஆஸ்திரே லியா. நேற்று முன்தினம் ஆன்டிகு வாவில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா =இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் பூவா தலையா வென்று முதலில் ஆடிய இந்திய மகளிர் அணி 19.3 ஓவர்களில் 112 ஓட் டங்களில் சுருண்டது.
அதிகபட்சமாக மந்தனா 34 ஒட்டங்கள் எடுத்தார். ரோட்ரிகஸ் 26 ஓட்டங்களும் கவுர் 16 ஓட்டங் களும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் நைட் 3 விக்கெட்டுகளை யும் எக்லஸ்டோன், கேர் டான் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த் தினர். இதையடுத்து 113 ஓட்டங் கள் என்ற எளிய இலக்குடன் இங் கிலாந்து அணி களமிறங்கியது. இந்திய மகளிர் அணியினர் நெருக்கடி அளிக்கும் விதத்தில் பந்துவீசியதால் முதல் 5 ஓவர் களில் 24 ஓட்டங்களுக்கு 2 விக் கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி தடுமாறியது. அதன் பின்னர் இணைந்த ஜோனஸ்-சிவர் ஜோடி அபாரமாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.
இங்கிலாந்தின் நட் சிவர் விளாசும் பந்தைப் பிடிக்கத் தயாரான தான்யா பாட்டியா. படம்: ஏஎஃப்பி

