இரண்டாவது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது

இரண்டாவது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது

1 mins read

மெல்பர்ன்: மெல்பர்னில் இந்தி யா=ஆஸ்திரேலியா இடையே யான 2ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டம் பாதியில் ரத்து செய் யப்பட்டது. மொத்தம் 3 ஆட்டங்கள் கொண்ட இத்தொடரில் முதல் ஆட்டத்தில் வென்று ஆஸ்தி ரேலியா முன்னிலை வகிக்கிறது. எனவே, 2ஆவது ஆட்டத்தில் வென்றால் மட்டுமே தொடரை தக்க வைக்க இயலும் என்ற நிலையில், இந்தியா நேற்று களமிறங்கியது. நாணயச் சுழற் சியில் வென்ற இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

அந்த முடிவுக்குப் பலன் கிடைத்தது. பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலிய அணியைத் திணறடித்தனர். மழை குறுக்கிட்டதால் 19 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணி 132 ஓட்டங்களை எடுத்தது. மீண்டும் நீண்ட நேரம் மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப் படுவதாக அறிவிக்கப்பட்டது.