புதுடெல்லி: மகளிர் உலகக் குத்துச்சண்டை வெற்றியாளர் கிண்ணத்தை ஆறாவது முறையாகக் கைப்பற்றி உலக சாதனை படைத்துள்ளார் இந்திய வீராங்கனை மேரி கோம். புதுடெல்லியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 48 கிலோ எடைப் பிரிவில், உக்ரேன் வீராங் கனை ஹனா ஒகோட்டாவை 5=0 என்று வீழ்த்திய மேரி கோம் உலக மகளிர் குத்துச்சண்டையில் 6வது முறையாக தங்கப்பதக்கம் வென்று தனித்துவமான உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதாவது உலகக் குத்துச் சண்டையில் 6 முறை தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற வரலாறு படைத்துள்ளார் மேரி கோம்.
இதற்கு முன் 2002, 2005, 2006, 2008, 2010 உலகக் குத்துச்சண்டையில் தங்கம் வென் றிருந்தார் மேரி கோம். 2001ல் வெள்ளி வென்ற மேரி கோம், இதன் மூலம் 7 பதக்கங்கள் வென்ற வீராங்கனையுமானார் மேரி கோம். அயர்லாந்தின் கேட்டி டெய்லர் 5 முறை தங்கம் வென்ற சாத னையை உடைத்தார் மேரி கோம். மற்றொரு இந்திய வீராங்கனை யான சோனியா சாஹல் 57 கிலோ எடைப்பிரிவில் ஜெர்மன் வீராங் கனை ஆர்னெலா வாஹ்னரிடம் தோற்று வெள்ளி வென்றார்.
உலகக் குத்துச்சண்டை வெற்றியாளர் போட்டியில் ஆறு முறை தங்கம் வென்ற ஒரே வீராங்கனை என்ற சாதனை படைத்த இந்திய வீராங்கனை மேரி கோம். படம்: ஊடகம்

