நெருக்கடியில் பயர்ன், ரியால்

நெருக்கடியில் பயர்ன், ரியால்

1 mins read

பெர்லின்: உள்ளூர் காற்பந்து லீக் போட்டிகளில் பின்னடைவைச் சந்தித்து வரும் நிலையில் சாம்பி யன்ஸ் லீக்கிலேனும் சாதிக்க வேண்டிய நெருக்கடியில் ஜெர்மனி யின் பயர்ன் மியூனிக் குழுவும் ஸ்பெயினின் ரியால் மட்ரிட் குழுவும் இருக்கின்றன. கடந்த மூன்று பருவங்களிலும் தொடர்ச்சியாக சாம்பியன்ஸ் லீக் பட்டத்தைக் கைப்பற்றிய ரியால் குழு, கடந்த சனிக்கிழமை நடந்த ஸ்பானிய லா லீகா ஆட்டத்தில் எய்பார் குழுவிடம் 3-0 என்ற கோல் கணக்கில் தோற்று அதிர்ச்சி அளித்தது.

நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ விலகியது முதலே அக்குழுவின் ஆட்டம் முன்னைப் போல சிறப்பாக இருக்கவில்லை. புதிய நிர்வாகி சான்டியாகோ சோலாரி நியமிக்கப்பட்ட பிறகு அக்குழுவிற்குக் கிட்டிய முதல் தோல்வி இதுதான். இந்நிலையில், நாளை அதி காலை நடக்கவுள்ள சாம்பியன்ஸ் லீக் 'ஜி' பிரிவு ஆட்டத்தில் ரியால், இத்தாலியின் ரோமா குழுவுடன் பொருதவுள்ளது. இரு குழுக் களுமே ஒன்பது புள்ளிகளுடன் இருப்பதால் இன்றைய ஆட்டத்தில் வெல்லும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

ரோமின் ஒலிம்பிக் விளை யாட்டரங்கத்தில் நடக்கவுள்ள இந்த ஆட்டத்தில் குழுத் தலைவர் டேனியலா டி ரோஸி, தாக்குதல் ஆட்டக்காரர் டியேகோ பெரோட்டி ஆகியோர் இல்லாமல் ரோமா களமிறங்கவுள்ளது. அதே நேரத் தில், தற்காப்பு வீரர் கோஸ்டாஸ் மனோலஸ் காயத்தில் இருந்து மீண்டு அணிக்குத் திரும்புகிறார்.