செரீனாவை எதிர்த்தாடும் ஃபெடரர்

செரீனாவை எதிர்த்தாடும் ஃபெடரர்

1 mins read

பெர்த்: டென்னிஸ் விளையாட்டில் ஆடவர், மகளிர் பிரிவுகளில் மிகச் சிறந்த ஆட்டக்காரர்களாக விளங்கும் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரும் அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும் முதன்முறையாக இன்று ஒருவரை ஒருவர் எதிர்த்து ஆடவுள்ளனர். ஹாப்மன் கிண்ணப் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இருவரும் தத்தம் நாடுகளைப் பிரதிநிதிக்கவுள்ளனர். "இருவருமே ஆர்வமாக இருக்கிறோம். அதேபோல, ஏராளமான ரசிகர்களும் இந்த ஆட்டத்தைக் காண ஆர்வமாக இருப்பர்," என்று ஃபெடரர் கூறியுள்ளார்.