ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா வெற்றி

ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா வெற்றி

1 mins read
a22fd243-26f2-496d-b874-612a7fee80e1
-

இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா = இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்றது. இந்தியா முதல் இன்னிங் சில் 250 ஓட்டங்களும் ஆஸ்திரேலியா 235 ஓட்டங்களும் எடுத்திருந்தன. 15 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, 307 ஓட்டங்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. அதனால் ஆஸ்தி ரேலியாவின் வெற்றிக்கு 323 ஓட்டங் கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 323 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்கள் விரைவில் விக்கெட்டை இழந்தனர்.

நிதானமாக ஆடிய ஷேன் மார்ஷ், டிராவிஸ் ஹெட் ஜோடி கவனமாக விளையாடிய நிலையில் 4ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 104 ஓட்டங்கள் எடுத்திருந்தது. மார்ஷ் 31 ஓட்டத்துடனும் ஹெட் 11 ஓட்டத்துடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில் நேற்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய ஷேன் மார்ஷ் அரை சதம் கடந்தார். ஆனால் அவர் 60 ஓட்டங்களில் விக்கெட்டை இழந்தார்.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா வெற்றி பெற்றதை நம்பமுடியாமல் மகிழ்ச்சியில் இருக்கின்றனர் வீரர்கள். படம்: ஏஎஃப்பி