கேரத் பேல் கோலால் தரவரிசையில் முன்னேறிய ரியால் மட்ரிட்

1 mins read

ஸ்பானிய லா லீகா காற்பந்துப் போட்டி ஒன்றில் நேற்று அதிகாலை ஹுசேகா குழுவை எதிர்கொண்டது ரியால் மட்ரிட். இதில் வேல்ஸ் நாட்டின் தாக்குதல் ஆட்டக்காரர் கேரத் பேல் போட்ட கோலால் ஆட்டம் இறுதியில் 1=0 என்ற கோல் எண்ணிக்கையில் ரியால் குழு வெற்றி பெற்றது. இதன் மூலம் ரியால் மட்ரிட் குழு லா லீகா தரவரிசைப் பட்டியலில் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதற்கு முன் ரியால் மட்-ரிட் குழுவின் கடந்த 10 ஆட்டங்களில் பேல் கோல் எதுவும் போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோலை பேல் ஆட்டத்தின் 8ஆம் நிமிடத்தில் போட்டார்.

எனினும் இரண்டாம் பாதி ஆட்டத்தில் ஹுசேகா குழு தனது பங்குக்கு கோல் போட்டு ஆட்டத்தை சமன் செய்யக் கிடைத்த பொன்னான வாய்ப்பை தவறவிட்டதாக பிபிசி செய்தித் தகவல் கூறுகிறது. நேற்றைய ஆட்டத்தின் பெரும் பகுதியில் ஹுசேகா அணி ரியால் மட்ரிட் குழுவை திக்குமுக்காட வைத்த போதும் அவர்களால் கோல் போட முடியவில்லை என்று கூறப்படுகிறது. ஆட்டத்தில் ரியால் மட்ரிட் குழுவுக்கு கோல் போட நான்கு வாய்ப்புகள் கிடைத்த நிலையில் அதே அளவு வாய்ப்புகளை ஹுசேகா குழுவும் பெற்றதாக காற்பந்து விமர்சகர்கள் தெரிவித்தனர். அத்துடன், முதற்பாதி ஆட்டத்தில் ஹுசேகா கோல் வலையை நோக்கி ரியால் குழு இரண்டு முறை மட்டுமே பந்தை உதைத்ததாக செய்தித் தகவல்கள் கூறுகின்றன.