ரின்: மான்செஸ்டர் யுனைடெட், ரியால் மட்ரிட் காற்பந்துக் குழுக் கள் சார்பில் விளையாடி, கோல் மழை பொழிந்து பெரும் புகழைச் சம்பாதித்தவர் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ. ரியால் குழுவிற்காக சாம்பி யன்ஸ் லீக் பட்டத்தை தொடர்ந்து மும்முறை வென்று தந்த பெரு மைக்குரிய ரொனால்டோ யாரும் எதிர்பாராத விதமாக கடந்த பரு வத்துடன் அக்குழுவில் இருந்து விலகினார். இந்தப் பருவத்தில் இத்தாலியின் யுவென்டஸ் குழுவிற் காக அவர் விளையாடி வருகிறார். அவரைப் போலவே, பார்சி லோனா குழுவிற்காக விளையாடி வரும் லயனல் மெஸ்ஸியும் காற் பந்து உலகில் முன்னணி ஆட்டக் காரராகத் திகழ்ந்து வருகிறார்.
ரொனால்டோவின் ரியாலும் மெஸ் ஸியின் பார்சிலோனாவும் களத்தில் சந்தித்துக்கொண்ட தருணங் களைக் காண ஸ்பானிய ரசிகர்கள் பேரார்வம் காட்டினர். இந்த நிலையில், ரொனால்டோ ஸ்பெயினைவிட்டு வெளியேறியதும் ரியால்-பார்சிலோனா இடையிலான 'எல் கிளாசிகோ' ஆட்டத்தின் விறு விறுப்பு குறைந்துள்ளதாகக் கருதப் படுகிறது.

