வால்ட்டன் நகரில் உள்ள குடிசன் பார்க் விளையாட்டரங்கில் நேற்று அதிகாலை நடந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டத்தில் எவர்ட்டன் = வாட்ஃபர்ட் குழுக்கள் மோதின. 15வது நிமிடத்தில் ரிச்சர்லிசன் அடித்த கோலால் எவர்ட்டன் முன்னிலைக்குச் சென்றது. இருப்பினும், பிற்பாதியில் சொந்த கோலடித்ததுடன் மேலும் ஒரு கோலை விட்டுத் தர, எவர்ட்டனைத் தோல்வி நெருங்கியது. ஆயினும், ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் கிட்டிய 'ஃபிரீ கிக்' வாய்ப்பு மூலம் லூக்காஸ் டின்ய (இடது) அற்புதமாக கோலடிக்க, ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சமன் கண்டது. படம்: ராய்ட்டர்ஸ்
கடைசி நேர கோலால் தோல்வியின் பிடியில் இருந்து விடுபட்ட எவர்ட்டன்
1 mins read
-

