போக்பா களமிறங்குவார்: மொரின்யோ உறுதி

போக்பா களமிறங்குவார்: மொரின்யோ உறுதி

1 mins read

வெலன்சியா: ஸ்பானிய காற்பந்துக் குழுவான வெலன்சியாவுக்கு எதி ராக நாளை அதிகாலை நடக்க இருக்கும் சாம்பியன்ஸ் லீக் ஆட் டத்தில் நட்சத்திர ஆட்டக்காரர் பால் போக்பா களமிறங்குவதை மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் நிர்வாகி ஜோசே மொரின்யோ உறுதிப்படுத்தியுள்ளார். 'எச்' பிரிவில் இடம்பெற்றுள்ள யுனைடெட் காலிறுதிக்கு முந்திய சுற்றுக்கு ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டது. இருந்தாலும் நாளை நடக்க உள்ள கடைசி லீக் ஆட்டத்தில் யுனைடெட் வென்று, யங் பாய்ஸ் குழுவிற்கெதிரான ஆட்டத்தில் யுவென்டஸ் தோற் கும்பட்சத்தில், 'எச்' பிரிவில் யுனைடெட் முதலிடத்தைப் பிடிக்க லாம். இந்த நிலையில், கடந்த இரு ஆட்டங்களாகக் களமிறக்கப்படாத போக்பா, வெலன்சியாவிற்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்பார் என்று மொரின்யோ தெரிவித்து உள்ளார்.

விவரம்: epaper.tamilmurasu.com.sg