கோஹ்லி: இது முதல் அடிதான்

அடிலெய்ட்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வென்றதன் மூலம் தொடரை வெல்வதற்கான முதல் அடியை வெற்றிகரமாக எடுத்து வைத்துள்ளோம் என்று இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராத் கோஹ்லி (படம்) தெரி வித்துள்ளார். மூன்று டி20, நான்கு டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள் ளது. முதலில் நடந்த டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. அதையடுத்து, கடந்த 6ஆம் தேதி அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவில் அவ்வணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வென்று இந்திய அணி முன்னிலை பெற்றிருப்பது இதுவே முதன்முறை.

இந்நிலையில், "ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில் நாம் மகிழ்ச்சி அடைந்து விட முடியாது. இருந்தாலும், முதல் போட்டியில் வென்றதால் மகிழ்ச்சி யாக இருக்கிறோம். அதே வேளை யில், இது முதல் அடிதான். இந்தி யாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதி ராக கடைசியாக நடந்த டெஸ்ட் தொடரை நாங்கள் கைப்பற்றி னோம். அதுபோல, நன்றாக ஆட வேண்டும் என்ற எண்ணத்துடனும் நம் பிக்கையுடனும்தான் ஆஸ்திரே லியாவிற்கும் வந்திருக்கிறோம். இம்முறை எங்களது தவறுகளில் இருந்து நாங்கள் விரைவில் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்," என்று கோஹ்லி சொன்னார்.

விவரம்: epaper.tamilmurasu.com.sg

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!