லிவர்பூல், ஸ்பர்ஸ் குழுக்கள் அடுத்த சுற்றுக்குத் தகுதி

லிவர்பூல், ஸ்பர்ஸ் குழுக்கள் அடுத்த சுற்றுக்குத் தகுதி

1 mins read
50f34a8a-f74e-4281-8330-3fd0225b39c7
-

லண்டன்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் நேற்று அதிகாலை நடைபெற்ற 'சி' பிரிவு ஆட்டத்தில் லிவர்பூல் குழு இத்தாலியின் நேப்போலியை 1=0 எனும் கோல் கணக்கில் வென்றது. தனது சொந்த மண்ணில் கிட்டிய இந்த வெற்றியின் மூலம் 'கடைசி 16' சுற்றுக்கு லிவர்பூல் தகுதி பெற்றுள்ளது. தோல்வியின் காரணமாக நேப்போலி குழு சாம்பியன்ஸ் லீக்கை விட்டு வெளியேறியது. நேப்போலியை 1-0 எனும் கோல் கணக்கிலோ அல்லது குறைந்தது இரண்டு கோல்கள் வித்தியாசத்திலோ வெல்வதன் மூலம் 'சி' பிரிவில் முதல் இரண்டு இடங்களில் ஏதேனும் ஒன்றைப் பிடிக்க முடியும் என்பது லிவர் பூலுக்குத் தெரியும்.

லிவர்பூலின் வெற்றிக்கு இந்த முறையும் வித்திட்டவர் தாக்குதல் ஆட்டக்காரரான முகம்மது சாலா. ஆட்டத்தின் 34வது நிமிடத்தில், கோல் வலையை நோக்கிய பாதை மிகவும் குறுகலாக இருந்த போதிலும் அவர் அற்புதமாக உதைத்த பந்து லோலானது. அதுவே லிவர்பூலின் வெற்றியை உறுதி செய்தது. லிவர்பூலுக்காக இவ்வாண்டு தான் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் சாலா வின் 34வது கோல் இது.

பார்சிலோனா ஆட்டக்காரர்களுடன் பொருதும் ஸ்பர்ஸ் குழுவின் ஹேரி கேன் (வெள்ளை சீருடையில்).

மேலும் செய்திகள்: epaper.tamilmurasu.com.sg