மணிப்பூர் இளம் வீரர் ரெக்ஸ் ராஜ்குமார் சிங் 10 விக்கெட்டுகள் எடுத்து புதிய சாதனையைப் படைத்து பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார். ஆனந்தபூரில் நடைபெற்ற கூச் பெஹர் யு=19 போட்டியில் அருணாசல பிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 9.5 ஓவர்கள் வீசி 11 ஓட்டங்கள் கொடுத்து எதிரணியின் அனைத்து விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார் ரெக்ஸ் சிங். அருணாச பிரதேச அணி ரெக்ஸ் சிங்கின் அசத்தலான பந்து வீச்சில் இரண்டாவது இன்னிங்ஸில் 36 ஓட்டங் களுக்குச் சுருண்டது. இதை யடுத்து இந்த இலக்கை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது மணிப்பூர் அணி. 18 வயது இடக்கைப் பந்து வீச்சாளரான ரெக்ஸ் சிங்கின் 10 விக்கெட்டுகளில் ஐந்து விக் கெட்டுகள் க்ளீன் போல்ட் செய்ததன் மூலம் கிடைத்தன. மூன்று முறை ஹாட்ரிக் விக்கெட் எடுக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தன. ரெக்ஸ் சிங் 10 விக்கெட்டுகள் எடுத்த ஆட்டத்தின் காணொளி யை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதையடுத்து சமூகவலைத் தளங்களில் பலரும் அதைப் பகிர்ந்து வருகிறார்கள்.
18 வயது மணிப்பூர் வீரர் 10 விக்கெட்டுகள் எடுத்து சாதனை
1 mins read
-

