இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணியில் அஸ்வின், ரோகித் இல்லை

இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணியில் அஸ்வின், ரோகித் இல்லை

1 mins read
cf49ec5d-6c65-4ad7-85ef-1d5072e55b7f
-

பெர்த்: ஆஸ்திரேலியாவிற்கு எதி­ரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்­கெட் போட்டியில் விளையாடவுள்ள 13 வீரர்கள் அடங்கிய இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்­வின், ரோகித் சர்மா ஆகியோர் இடம்பெறவில்லை. இப்போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறி­வித்தபோது இது தெரிய வந்தது. காயம் காரணமாக அவர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்திய அணியின் இளம் தொடக்கப் பந்தடிப்பாளர் பிருத்வி ஷா காயத்தில் இருந்து இன்னும் முழுமையாகக் குணமடையாததால் எதிர்வரும் போட்டியில் அவர் இடம்பெறமாட்டார் என முன்னதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் அஸ்வின், ரோகித் சர்மா இருவரும் அணியில் இடம்பெறாததால் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. மாறாக, ஆஸ்திரேலிய அணி­யில் மாற்றம் ஏதும் செய்யப்பட­ வில்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது. இரு அணிகள் மோதும் இரண்­ ­டாவது டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் இன்று தொடங்குகிறது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்­பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி நான்கு போட்டி­கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.