மான்செஸ்டர் சிட்டியை காப்பாற்றிய லிரோய் சானே

சாம்பியன்ஸ் லீக் 'எஃப்' பிரிவு ஆட்டமொன்றில் நேற்று அதிகாலை மான்செஸ்டர் சிட்டியும் ஹோஃபன்ஹைம் குழுவும் மோதின. இதில் ஆட்டத்தின் 16ஆம் நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பின் மூலம் முன்னிலை பெற்ற ஹோஃபன்ஹைம் குழுவை பின்னர் மான்செஸ்டர் சிட்டியின் லிரோய் சானே போட்ட இரு கோல்களால் ஆட்டத்தின் இறுதி யில் 2=1 என்ற கோல் எண் ணிக்கையில் வாகை சூடி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. நேற்றைய ஆட்டத்தில் கோல் போடக்கூடிய பல வாய்ப்புகளை சிட்டி குழுவே ஏற்படுத்திய போதும் ஆட்டத்தின் முதல் கோலை என்னவோ ஹோஃபன்ஹைம் குழுதான் போட்டது. அதன் பின்னரே சிட்டி குழு உயிர் பெற்றெழுந்ததாக பிபிசி செய்தித் தகவல் கூறுகிறது.

ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் முன்னாள் லெஸ்டர் சிட்டி குழு வில் விளையாடிய ஆன்ட்ரெஜ் கிரமாரிச் என்பவர் ஹோஃபன் ஹைம் குழுவிற்கு முன்னிலை பெற்றுத் தந்தார். ஆனால், முதல் பாதி ஆட்டத் தின் கூடுதல் நேரத்தில் லிரோய் சானே ஃப்ரீகிக் வாய்ப்பைப் பயன்படுத்தி கோல் கம்பத்துக்கு 25 மீட்டர் தொலைவிலிருந்து உதைத்த பந்து சிட்டியின் முதல் கோலாக மாறியது. பின்னர் ஆட்டத்தின் 61 வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி மேற்கொண்ட எதிர்த் தாக்குதலை சிட்டியின் இரண்டாவது கோல் போட்டு இனிதே முடித்து வைத்தார் லிரோய் சானே.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!