ஐரோப்பா லீக்: இன்று அதிகாலையில் நடந்த ஐரோப்பா லீக் தகுதிச் சுற்று ஆட்டங்களில் ஆர்சனல் குழு 1-0 என்ற கோல் கணக்கில் ஃப்கே கரபாக் (FK Qarabag) குழுவை வென்றது.
இந்த வெற்றியின் மூலம் இதுவரையில் எந்த தோல்வியையும் காணாது 'இ' பிரிவு பட்டியலில் முதலிடம் வகித்து அது போட்டியின் அடுத்த சுற்றுக்கு முன்னேறுகிறது.
மற்ற ஆட்டங்களில், அதே போன்று செல்சி அணி இதுவரையில் எந்த தோல்வியையும் தழுவாது 'எல்' பிரிவு பட்டியலின் உச்சத்தில் தன் நிலையை தக்கவைத்துக் கொண்டது.
அது விடி (vidi) குழுவுடன் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டது.
இவ்விரு அணிகளும் அடுத்ததாக போட்டியில் எந்த குழுக்களுடன் பொருதவிருக்கின்றன என்பது வரும் 18ஆம் தேதிக்குள் தெரிந்துவிடும்.
படம்: ராய்ட்டர்ஸ்