ஆர்சனல், செல்சி முன்னேற்றம்

ஆர்சனல், செல்சி முன்னேற்றம்

1 mins read

லண்டன்: யூரோப்பா லீக் காற்பந்தின் அடுத்த சுற்றுக்கு செல்சி, ஆர்சனல் குழுக்கள் தகுதிபெற்று உள்ளன. இவ்விரு குழுக்களும் முதல் சுற்று ஆட்டங்களில் தோல்வியே காணாமல் 16 புள்ளிகளுடன் தத்தமது பிரிவுகளில் முதல் இடத்தைப் பிடித்தன. அஸர்பைஸானின் கரபா குழுவிற்கு எதிராக நேற்று அதி காலை நடந்த 'இ' பிரிவு ஆட்டத் தில் அலெக்சாண்டர் லாக்கஸெட் அடித்த ஒற்றை கோலால் 1-0 என்ற கணக்கில் ஆர்சனல் வெற்றி பெற்றது. 'எல்' பிரிவில் இடம்பெற்ற செல்சி, ஹங்கேரியின் எம்ஓஎல் வீடி குழுவுடன் மோதியது. முற் பாதி ஆட்டம் 1-1 என முடிந்த நிலையில், இரண்டாம் பாதியின் 11வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோலை அடித்து முன்னிலை பெற்றது வீடி குழு. இருந்தாலும் ஆட்டம் முடிய கால் மணி நேரம் இருந்தபோது 'ஃபிரீ கிக்' மூலம் ஒலிவியே ஜிரூ அடித்த அற்புத கோலால் செல்சி 2=2 என ஆட்டத்தைச் சமன்படுத்தியது. ஆட்டத்தின்போது செல்சி ரசிகர்கள் சிலர் இனப்பழிப்பில் ஈடுபட்டனர். அங்கிருந்த ஸ்பர்ஸ் ரசிகர்களின் மனம் புண்படும் விதமாக அவர்கள் ஒரு பாடலைப் பாடினர்.