மொரின்யோ: கிண்ணம் வெல்வதே முக்கியம்

லிவர்பூல்: யர்கன் கிளோப் 2015ஆம் ஆண்டில் நிர்வாகியாகப் பதவியேற்றதில் இருந்து லிவர்பூல் காற்பந்துக் குழுவின் செயல்பாட் டில் நல்ல முன்னேற்றம் காணப் படுகிறது. கடந்த பருவத்தில் சாம்பியன்ஸ் லீக்கின் இறுதிச் சுற்று வரை சென்ற அக்குழு, இப்போது இங்கிலிஷ் பிரிமியர் லீக் புள்ளிப் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளது. நடப்பு இபிஎல்லில் வெல்ல முடியாததாகத் திகழ்ந்து வரும் ஒரே குழுவும் லிவர்பூல்தான்.

இதற்கெல்லாம் காரணமான கிளோப்பின் தாக்குதல் ஆட்ட பாணியைப் பலரும் புகழ்ந்து வரும் நிலையில் மான்செஸ்டர் யுனை டெட் நிர்வாகி ஜோசே மொரின்யோ மட்டும் அப்படி நினைக்கவில்லை. "பாராட்டெல்லாம் ஒரு பொருட் டல்ல. கிண்ணங்களை வெல்வது தான் முக்கியம்," என்கிறார் மொரின்யோ. ஏனெனில், கிளோப் பின்கீழ் லிவர்பூல் இன்னும் ஒரு கிண்ணத்தைக்கூட வென்றது கிடையாது. நாளை நள்ளிரவு 12 மணிக்கு நடக்கவுள்ள ஆட்டத்தில் லிவர்பூல் குழுவை எதிர்கொள்கிறது யுனை டெட். லிவர்பூலின் ஆன்ஃபீல்ட் அரங்கில் நடைபெறும் இந்த ஆட்டத்தின் மூலம் அக்குழுவின் வெற்றிப் பயணத்திற்கு யுனைடெட் முட்டுக்கட்டையிடும் என எதிர் பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!