லண்டன்: நடப்பு இங்கிலிஷ் பிரிமியர் லீக் (இபிஎல்) பருவத்தில் சிறப்பாக விளையாடுவதில் மான் செஸ்டர் யுனைடெட் குழுவிற்கு சவால்கள் இருந்தாலும் அதன் ஆட்டக்காரர்களிடம் நம்ப முடியாத அளவிற்கு தரம் நிறைந்திருப்பதாக லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப் கூறியுள்ளார். இன்று நள்ளிரவு 12 மணிக்கு தனது சொந்த மண்ணில் நடை பெறவுள்ள இபிஎல் ஆட்டத்தில் யுனைடெட்டை லிவர்பூல் எதிர் கொள்கிறது. நேற்று நிலவரப்படி, இபிஎல் பருவத்தில் இது வரை தான் விளையாடிய 16 ஆட்டங்க ளில் எதிலும் தோற்காமல் புள்ளிப் பட்டியலில் லிவர்பூல் முதலிடத்தில் இருந்தது. ஆனால், எதிர்வரும் இந்த ஆட்டத்தில் லிவர்பூலின் முன் னேற்றப் பாதைக்கு யுனைடெட் முட்டுக்கடையிடும் என இபிஎல் காற்பந்து வட்டாரத்தில் எதிர்பார்க் கப்படுகிறது. எனவேதான் யுனைடெ ட்டைக் குறைத்து எடைபோட கிளோப் மறுக்கிறார். "யுடைடெட் வீரர்களிடம் வேகம், விவேகம், உத்தி, உடலுறுதி எனக் கிட்டத்தட்ட அனைத்து திறன்களும் உள்ளன. அந்தக் குழுவில் உலகத் தரம் வாய்ந்த கோல்காப்பாளர் உள்ளார்," என டாவிட் ட கியாவைக் குறிப் பிட்டுப் பேசினார் கிளோப்.
கிளோப்: மேன்யூ ஆட்டக்காரர்களை குறைத்து எடைபோட மாட்டோம்
1 mins read
-

