குவாங்சோவ்: சீனாவின் குவாங்சோவ் நகரில் நடை பெற்று வரும் உலக பேட் மிண் டன் ஃபைனல்ஸ் தொடரில் பெண்களுக்கான பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங் கனை பி.வி.சிந்து (படம்) இறுதிப் போட்டிக்கு முன்னேறி னார். இப்போட்டியில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை சிந்து வெளிப்படுத்தி வருகிறார். அடுத்தடுத்து மூன்று போட்டி களில் வெற்றி பெற்ற அவர் முன்னதாக அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்தார். இந்நிலையில், நேற்று நடை பெற்ற அரையிறுதி ஆட்டத்தில் தாய்லாந்து வீராங்கனை ரட்சனோக் இன்டானனை சிந்து எதிர்கொண்டார். பரபரப்பான இப்போட்டியில் 21=16, 25=23 என்ற செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டி யில் ஜப்பான் வீராங்கனை நோசோமி ஒகுஹராவுடன் சிந்து பலப்பரிட்சை நடத்தவுள்ளார். கடந்த ஆண்டும் இதே தொடரின் இறுதிப் போட்டிக்குப் பி.வி.சிந்து தகுதி பெற்றிருந்தார். ஆனால் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து அவர் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
1 mins read

