டென்னிஸ்: வாய்ப்பு பெற ஐந்து நகரங்கள் போட்டி

டென்னிஸ்: வாய்ப்பு பெற ஐந்து நகரங்கள் போட்டி

1 mins read

ஆண்களுக்கான ஏடிபி இறுதிப் போட்டிகளை 2021 முதல் 2025ஆம் ஆண்டு வரை ஏற்று நடத்துவதில் சிங்கப்பூர் ஒருபடி முன்னெடுத்துள்ளது. இப்போட்டியை ஏற்று நடத்தப் போட்டியிடும் ஐந்து நகரப் பட்டியலில் சிங்கப்பூர் இடம்பெற்றுள்ளது. இதில் மான்செஸ்டர், தோக்கியோ, டூரின், தற்போது இப்போட்டியை ஏற்று நடத்தி வரும் லண்டன் ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. ஏடிபி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்த விவரங்களைத் தெரிவித்தது. 'ஏடிபி ஃபைனல்ஸ்' போட்டிகளை ஏற்று நடத்தும் நகரம் எது என்பது குறித்து அடுத்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் அறிவிக்கப்படும்.