புயல் வேக ஷகிரி; சாய்ந்தது மேன்யூ

லிவர்பூல்: அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி பரம வைரியான மான்செஸ்டர் யுனைடெட்டை 3=1 எனும் கோல் கணக்கில் லிவர்பூல் நேற்று அதிகாலை வீழ்த்தியது. இந்த வெற்றியின் விளை வாக இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி பட்டியலில் லிவர்பூல் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆறு ஆட்டங்களில் லிவர்பூல் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்துள்ளது. ஆட்டம் தொடங்கிய திலிருந்து லிவர்பூல் நடத்திய தாக்குதல்கள் யுனைடெட்டைத் திணறடித்தன.

ஆட்டத்தின் 24வது நிமிடத்தில் லிவர்பூலின் முதல் கோலை சாடியோ மானே போட்டார். ஃபிர்மினோ அனுப்பிய பந்தை அழகாக தமது கட்டுக்குள் கொண்டு வந்த மானே அதை வலைக்குள் சேர்த்தார். அதனைத் தொடர்ந்து, லிவர்பூல் தொடர்ந்து தாக்கு தலில் தீவிரம் காட்டியது. இருப்பினும், கிடைத்த வாய்ப்புகளை அது நழுவ விட்டது. இந்நிலையில், ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் மான் செஸ்டர் யுனைடெட் எதிர்பாராத விதமாக கோல் அடித்தது. யுனைடெட்டின் ரொமேலு லுக்காகு பெனால்டி எல்லைக் குள் அனுப்பிய பந்தைப் பிடிக்க முற்பட்டார் லிவர்பூல் கோல் காப்பாளர் அலிசன். ஆனால் பந்தை அவர் பிடிக்க தவறினார். அவர் மீது பட்டுச் சென்ற பந்து மீது பாய்ந்த யுனை டெட்டின் ஜெசி லிங்கார்ட் அதை வலைக்குள் அனுப்பி னார். இடைவேளையின்போது ஆட்டம் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது.

லிவர்பூலின் மூன்றாவது கோலைப் போட்டு சக ஆட்டக்காரர் ஃபிர்மினோவுடன் கொண்டாடும் ஷகிரி (இடது). படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!