ஹாக்கி: நெதர்லாந்தை வீழ்த்தி மகுடம் சூடிய பெல்ஜியம்

புவனேஸ்வர்: உலகக் கிண்ண ஹாக்கிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்தும் பெல்ஜியமும் மோதின. கடுமையான போட்டிக்குப் பிறகு பெல்ஜியம் வாகை சூடியது. 14வது உலகக் கிண்ண ஆண்கள் ஹாக்கிப் போட்டி இந்தியாவின் ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா விளையாட்டரங்கில் நடைபெற்றது. இறுதி ஆட்டத்தில் நெதர் லாந்தும் பெல்ஜியமும் விட்டுக் கொடுக்காமல் விளையாடின. இதனால் ஆட்டம் கோல் ஏதுமின்றி முடிந்தது. மாபெரும் வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ‌ஷூட்அவுட் நடத்தப்பட்டது.

முதல் இரண்டு முயற்சிகளை பெல்ஜியம் கோட்டைவிட்டது. இதனால் நெதர்லாந்துதான் கிண்ணத்தை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் நிலைமை மாறியது. நெதர்லாந்தின் பெனால்டி முயற்சி களை பெல்ஜியத்தின் கோல் காப்பாளர் முறியடிக்க, பெல்ஜியம் அதன் பெனால்டி வாய்ப்புகளைக் கோல்களாக மாற்றியது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் பெனால்டி வாய்ப்பை பெல்ஜியம் கோலாக்கி கொண்டாடத் தொடங் கியபோது கோல் செல்லாது என்று எதிர்ப்பு தெரிவித்தது நெதர் லாந்தது. பரிசீலனைக்குப் பிறகு கோல் நிராகரிக்கப்பட்டது. மீண்டும் பெனால்டியை எடுத்த பெல்ஜியம் கோல் போட்டது. நெதர்லாந்து அதன் வாய்ப்பை நழுவவிட்டது. இதன் மூலம் போட்டியைக் கைப்பற்றி கிண்ணத்தை ஏந்தியது பெல்ஜியம். மூன்றாவது இடத்தை நிர்ண யிக்கும் ஆட்டத்தில் 8=1 எனும் கோல் கணக்கில் இங்கிலாந்தைப் பந்தாடியது ஆஸ்திரேலியா.

கடுமையான போட்டிக்குப் பிறகு பெனால்டி ‌ஷூட்அவுட்டில் நெதர்லாந்தை வீழ்த்தியதும் கொண்டாட்ட மழையில் நனையும் பெல்ஜியம் வீரர்கள். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!