நியோன்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் காலிறு திக்கு முந்திய ஆட்டங்கள் நேற்று முன்தினம் குலுக்கல் முறை வழியாக நிர்ணயிக்கப் பட்டன. இதில் லிவர்பூல்=பயர்ன் மியூனிக், மான்செஸ்டர் யுனை டெட்=பாரிஸ் செயிண்ட் ஜெர் மேன் ஆகிய ஆட்டங்கள் காற்பந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. லிவர்பூல் தற்போது இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டியலில் முதல் இடம் வகிக்கிறது. மாறாக, பயர்ன் மியூனிக் இப்பருவத்தில் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படாமல் ஏமாற்றத்துடன் இருக்கிறது. இருப்பினும், லிவர்பூலுக்கும் பயர்னுக்கும் இடையிலான ஆட்டம் விறுவிறுப்பானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. "பயர்னுக்கு எதிரான ஆட்டம் சவால்மிக்கதாகவும் விறுவிறுப் பானதாகவும் இருக்கும். இந்த ஆட்டத்துக்காக நான் மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருக் கிறேன்," என்றார் லிவர்பூலின் நிர்வாகி யர்கன் கிளோப். காலிறுதிக்கு முந்திய ஆட்டத்தில் அட்லெட்டிகோ மட்ரிட் குழுவுடன் மோதுகிறது இத்தாலியின் யுவென்டஸ்.
'சவால்மிக்க ஆட்டமாக இருக்கும்'
1 mins read

