ஜெய்ப்பூர்: ஐபிஎல் ஏலத்தில் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். ரூ.20 லட்சத் தில் தொடங்கிய ஏலம் ரூ 8.4 கோடிக்கு முடிவுக்கு வந்தது. அவரைப் பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது. தமிழக வீரரான இவர் டி.என்.பி.எல்வில் மதுரை அணிக்காக விளையாடி யவர். இந்தியாவின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான உனாத் கட்டை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8.4 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்துள்ளது. ஐபிஎல் வீரர்கள் ஏலம் நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இந்திய வீரர் முகம்மது ஷமியை கிங்ஸ் லெவன் பஞ்சாப் 4.8 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. வருண் ஆரோனை 2.40 கோடி ரூபாய் கொடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது. இந்தியாவின் ஹனுமா விஹாரியை டெல்லி அணி 2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஹெட்மையரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 4.2 கோடி ரூபாய்க்கு வாங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணித் தலைவர் கார்லஸ் பிராத்வைட்டை கோல்கத்தா அணி 5 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
ஐபிஎல் ஏலத்தில் தமிழக வீரருக்கு 8.4 கோடி ரூபாய்
1 mins read

