கோஹ்லியின் படை சுருண்டது

கோஹ்லியின் படை சுருண்டது

1 mins read
c4ec9409-60b7-4077-9493-514a495a1d35
-

பெர்த்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா 146 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்றது. பூவா தலையாவில் வென்று முதலில் பந்தடித்தது ஆஸ்தி ரேலியா. ஆஸ்திரேலியா அதன் முதல் இன்னிங்சில் 326 ஓட்டங்கள் குவித்தது. அதனைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சைத் தொடங்கிய இந்தியா, அணித் தலைவர் விராத் கோஹ்லி சதம் அடித்தபோதிலும் 283 ஓட்டங்களில் சுருண்டது.

43 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய ஆஸ்திரேலியா 243 ஓட்டங்கள் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து, 287 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற சவால் மிக்க இலக்குடன் களமிறங்கிய இந்தியா 55 ஓட்டங்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திக்கு முக்காடியது. நான்காம் நாள் ஆட்ட நேர இறுதியில் இந்தியா 5 விக்கெட் டுகளை இழந்து 112 ஓட்டங்கள் எடுத்திருந்தது. விஹாரி 24 ஓட்டங்களுடனும் ரிஷப் பன்ட் 9 ஓட்டங்களுடனும் களத்தில் இருந் தனர். இந்தியாவின் வெற்றிக்கு 175 ஓட்டங்கள் தேவை, கைவசம் ஐந்து விக்கெட்டுக்கள் இருந்த நிலையில், கடைசி நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது.

இந்திய வீரர் ஜஸ்பிரீத் பும்ராவின் விக்கெட்டைச் சாய்த்துக் கொண்டாடும் ஆஸ்திரேலிய வீரர்கள். படம்: ஏஎஃப்பி