ஐந்தாவது முறையாக தங்கக் காலணியைத் தட்டிச் சென்றார் லயனல் மெஸ்ஸி

பார்சிலோனா: பார்சிலோனா காற்பந்துக் குழுவுக்காக கடந்த பருவத்தில் 68 போட்டிகளில் 34 கோல்கள் அடித்த நட்சத்திர ஆட்டக்காரர் லயனல் மெஸ்ஸி, இப்போது ஐந்தாவது முறையாக தங்கக் காலணி விருதை தட்டிச் சென்றுள்ளார். ஐரோப்பாவில் உள்ள பிரசித்தி பெற்ற காற்பந்துக் குழுக்களில் விளையாடும் ஆட்டக்காரர்களில் சிறந்த ஆட்டத் திறனை வெளிப் படுத்தி அதிக கோல்கள் அடிக்கும் வீரர்களைத் தேர்வு செய்து ஆண்டுதோறும் தங்கக் காலணி விருது வழங்கப்பட்டு வருகிறது.

இதில், 2017/18 பருவத்தில் மெஸ்ஸி, லிவர்பூலின் முகம்மது சாலா, டோட்டன்ஹம் ஹாட்ஸ் பரின் ஹேரி கேன் ஆகியோரு க்கிடையே தங்கக் காலணி யைப் பெற கடும் போட்டி நிலவியது. யுவென்டஸ் நட்சத்திர ஆட்டக் காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இவ்விருதை நான்கு முறை வென்றுள்ளார். ரொனால்டோ 52 போட்டிகளில் 26 கோல்களை அடித்திருந்தார். இந்நிலையில், தங்கக் கால ணியை வென்ற மெஸ்ஸி இது பற்றி கூறுகையில், "உண்மை யிலேயே பார்சிலோனா வுக்காக நான் காற்பந்து விளையாடத் தொடங்கும்போது இந்த விருது எனக்கு கிடைக்கும் என்று நினைக்கவே இல்லை. நான் காற்பந்து விளையாட்டை மிகவும் விரும்புகிறேன். இந்த விருதை ஐந்தாவது முறையாக பெறுவேன் என்று நினைத்தது கிடையாது,'' என்றார்.

ஐந்தாவது முறையாக தங்கக் காலணி விருதை வென்றுள்ள லயனல் மெஸ்ஸி. படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!