இடைக்கால நிர்வாகியாக சோல்சியார் நியமனம்

இடைக்கால நிர்வாகியாக சோல்சியார் நியமனம்

1 mins read
73a48b5d-c61e-48ec-948a-34e48f9a226e
-

லண்டன்: மான்செஸ்டர் யுனை டெட் நிர்வாகி பதவியிலிருந்து ஜோசே மொரின்யோ நீக்கப் பட்டதை அடுத்து முன்னாள் யுனைடெட் வீரர் ஒலே குனார் சோல்சியார் அக்குழுவின் இடைக் கால நிர்வாகியாக நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் அந்தப் பதவியை ஏற்பார் என்று யுனைடெட்டின் இணையத்தளம் முன்னதாக கோடிகாட்டியிருந்தது. யுனைடெட் நிர்வாகியாக இரண்டரை ஆண்டுகள் பொறுப்பு வகித்த மொரின்யோ, நேற்று முன் தினம் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

அவரது தலைமைத்துவத்தின்கீழ் நடப்பு இங்கிலிஷ் பிரிமியர் லீக் (இபிஎல்) பருவம் தொடங்கியதில் இருந்து யுனைடெட் சோபிக்கவி ல்லை. பல ஏமாற்றங்களைச் சந்தித்து வந்துள்ள யுனைடெட், லீக் பட்டி யலில் முன்னிலை வகிக்கும் லிவர்பூ லைவிட 19 புள்ளிகள் குறை வாகப் பெற்று ஆறாவது இடத்தில் உள்ளது. நார்வேயின் மோல்டே காற் பந்துக் குழுவிற்கு நிர்வாகியாக பொறுப்பு வகிக்கும் சோல்சியார், நடப்பு இபிஎல் பருவம் இறுதிவரை யுனைடெட்டின் இடைக்கால நிர்வாகியாகப் பணியாற்றவுள்ளார். அதே வேளையில், நிரந்தர நிர்வா கிக் கான தேடும் படலம் தொடங்கிவி ட்டது என யுனைடெட் குழுவின் நிர்வாகம் நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டது.