இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு இழப்பீடு வழங்கும்படி பாகிஸ்தானுக்கு ஐசிசி உத்தரவு

இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு இழப்பீடு வழங்கும்படி பாகிஸ்தானுக்கு ஐசிசி உத்தரவு

1 mins read

துபாய்: இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியத்திற்கு (பிசிசிஐ) 14 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கும்படி அனைத்துலக கிரிக்கெட் மன்றம் (ஐசிசி) பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது இந்தியாவில் நிகழும் பயங்கர வாதத் தாக்குதல்களுக்கு பாகிஸ் தான் ஆதரவு பயங்கரவாதிகளே காரணம் என இந்தியா குற்றம் சாட்டி வருகிறது. அத்தகைய தாக்குதல்கள் நிற்காத வரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி யுடன் இருதரப்புத் தொடர்களில் விளையாட முடியாது என இந்தியா அறிவித்துவிட்டது. வேறு நாடுகளில் ஐசிசி நடத்தும் போட்டித் தொடர்களில் மட்டும் பாகிஸ்தான் அணியுடன் இந்தியா மோத மறுப்பதில்லை.

இந்தியாவுடன் இருதரப்புத் தொடர்களில் பங்கேற்காததால் தனக்குப் பெரிய அளவில் வருமான இழப்பு ஏற்பட்டு வருவதாக பாகிஸ் தான் கிரிக்கெட் வாரியம் கூறி வருகிறது. அவ்வகையில், 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தானுடனான இருதரப்புத் தொடரில் விளையாட மறுத்து விட்டதால் பிசிசிஐ தனக்கு ரூ.446 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக் கெட் வாரியம், ஐசிசியிடம் புகார் அளித்தது.