மான்செஸ்டர்: முன்னாள் ஆட்டக் காரர் ஒலே குனார் சோல்சியாரை இடைக்கால நிர்வாகியாக அறி வித்த கையோடு குறைந்தது இரு புதிய ஆட்டக்காரர்களை வாங்கி குழுவையும் பலப்படுத்த மான்செஸ்டர் யுனைடெட் காற் பந்துக் குழு திட்டமிட்டுள்ளது. மத்தியத் திடல் ஆட்டக்காரர், தற்காப்பு ஆட்டக்காரர் என இரு நிலைகளுக்கு எப்படியேனும் திற மையான இருவரைத் தன்பக்கம் இழுத்துவிடவேண்டும் என்பதில் மேன்யூ தீவிரமாக உள்ளது. அந்நிலைகளுக்கு டோட்டன் ஹம் ஹாட்ஸ்பரின் டோபி அல்டர் வெய்ல்ட், யுவென்டஸ் குழுவின் டக்ளஸ் கோஸ்டா ஆகிய இரு வரையும் மேன்யூ குறிவைத்துள்ள தாகச் சொல்லப்படுகிறது. இதற்காக, அக்குழு 50 மில்லி யன் பவுண்டு வரை (S$86.8 மி.) செலவிடத் தயாராக இருப்பதாக வும் 'மிரர்' செய்தி கூறுகிறது.
குழுவைப் பலப்படுத்த மேன்யூ திட்டம்; £50 மி. ஒதுக்கீடு
1 mins read

